பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இடைக்கணுப் புழு:  சைலோ சக்காரிபேகஸ் இன்டிகஸ்    
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இடைக்கணுப்புழு கரும்பு நட்ட முன்று மாதங்களுக்கு மேல் தோன்றி அறுவடை வரையும் தொடரும்.
  • தாக்கப்பட்ட கணுவிடைப்பகுதி சிறியதாகச் சுருங்கிப் காணப்படும். முதல் ஐந்து கணுவிடைப்பகுதிகளை மட்டுமே அதிகம் தாக்குகின்றது.
  • அதில் பல துளைகளும், துளைகளின் அருகில் புழுவின் எச்சம் காணப்படும்.
  • தாக்கப்பட்ட திசுப்பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
 
  இடைக்கணு அருகில் துளைகள் குறுக்கப்பட்ட இடைக்கணு
துளைகளின் அருகில் புழுவின் எச்சம் பாதிக்கப்பட்ட பகுதியில் மர தூள்கள்
பூச்சியின் விபரம்: 
  • முட்டை:  இலைப் பரப்பின் நடுநரம்பிலிருந்து கரும்புத் தண்டில் அருகில் அல்லது 9-11 முட்டைகள் பகுதி பகுதியாக இடப்பட்டிருக்கும்.  முட்டைகள் தட்டையாக நீள் வட்ட வடிவில், மெழுகு போன்று பளப்பளப்புடன் வெண்மை நிறத்தில் இருக்கும்.
  • கூட்டுப்புழு: பாதி உலர்ந்த நிலையில் சோகையின் பரப்பில் கூடுகட்டி இருக்கும்.  கூட்டுப்புழு நிலை 7-10 நாட்கள் வரை இருக்கும்.
  • இளம்புழு:  வெள்ளை நிற உடலும் பழுப்பு நிற தலையும் கொண்ட இளம்புழுவில் நான்கு ஊதா நிறக்கோடுகள் காணப்படும்.
  • முதிர்ந்த பூச்சி: முன் இறக்கைகள் இரண்டும் வைக்கோல் நிறத்தில் இருக்கும்.  அவற்றில் சிறு புள்ளிகள் நடுவில் காணப்படும்.
       
  புழு   கூட்டுப்புழு   பூச்சி  
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறைகள்:

  • கோ 97-5, கோ ஜே 46, கோ 7304, போன்ற எதிர்ப்பு இரகங்களைப் பயிரிடலாம்.
  • இடைக்கணுப் புழு தாக்குதலற்ற ஆரோக்கியமான கரணைகளை விதைக்குத் தேர்வு செய்யவேண்டும்.
  • நட்ட 150வது மற்றும் 210வது நாளில்  சோகை உரித்து அதனை மண்ணில் பரப்பி அல்லது புதைத்து விட வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு இனக்கவர்ச்சி பொறியை 10 எண்ணிக்கை வைக்க வேண்டும். அந்த பொறியில்  இருக்கும் Septa /lure 45 நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

இயற்பியல் முறைகள்:

  • இப்பூச்சியின் முட்டைகள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விடவும்.
  • 150 மற்றும் 210வது நாட்களில் முறையாக சோகை உரித்தல் வேண்டும்.  இதனால் இலைப்பரப்புகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் கூட்டுப்புழுக்கள் நீக்கப்படும்.

உயிரியல் முறைகள்:

  • முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிரம்மா கைலோனிஸ் அட்டையை 2.5 சி.சி/ஹ என்ற வீதம் 15 நாட்களுக்கு ஒருமுறை என்றவாறு 4வது மாதத்திலிருந்து வயலில் கட்டி விட வேண்டும்.

இரசயான முறை:

  • அதிகப்படியான நைட்ரஜன் உரமிடுதலைத் தவிர்க்கவும்.இதனால் இலை தீதலில் இருந்து தவிர்களாம்.
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115.

Source of Images:

http://www.nbair.res.in/insectpests/Chilo-sacchariphagus.php

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015